கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையேற்று வினைத்திறனாக சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஏ. எல். எம். அஸ்மியின் நேர்த்தியானதும் நேர்மையானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மாநகர மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனையன்ஸ் போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு தனியார் வரவேற்பு மண்டபத்தில் கடந்த செவ்வாய் கிழமை (18) இடம்பெற்ற போதே இக்கெளரவம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடமையைப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் காத்திரமான பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் ஆணையாளரின் சேவையைப் பாராட்டியே இக்கெளரவம் கல்முனை மக்கள் சார்பாக கல்முனையன்ஸ் போரமினால் வழங்கப்பட்டது.
மாநகர ஆணையாளருக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸாக் ஜவாத், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், கல்முனையின் முதுசம் நஸீர் ஹாஜி மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி இக்கெளரவம் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment