கடற்றொழில் அமைச்சர் டக்ளஸினது அறிவுறுத்தலில் காரைதீவில் மீனவர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் - பூர்வாங்க முன்னெடுப்புகள் ஆரம்பம்



ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய காரைதீவு பிரதேச மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டு வேலை திட்டங்களுக்கான பூர்வாங்க முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.

கடந்த நாட்களில் அம்பாறை மாவட்டம் முழுவதும் சூறாவளி விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறைவாக சனிக்கிழமை இரவு காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமி சர்வமத பீடத்தை தரிசித்தார். இவருக்கு இங்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வமத பீடத்தின் ஸ்தாபகரும், தலைவருமான ஜீவாகரன் சுவாமிகள் ஆசி வழங்கினார்.

வெளியில் திரண்டு நின்ற மீனவர்களுடன் அமைச்சர் பேசினார். மீனவர்களுக்கான வீட்டு திட்டம், வலைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட வேலை திட்டங்களில் காரைதீவு பிரதேச மீனவர்களை உள்ளீர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் த. தர்மேந்திராவுக்கு அறிவுறுத்தினார்.

மக்கள் நலன் மேம்பாட்டு திட்டங்கள் அனைத்துக்கும் சர்வமத பீடம் ஒத்துழைப்பு வழங்கும் என்று ஜீவாகரன் சுவாமிகள் தெரிவித்தார். அமைச்சரின் அறிவுறுத்தல், ஆலோசனை ஆகியவற்றின் பிரகாரம் பயனாளிகளை அடையாளம் கண்டு முன்னிலைப்படுத்துகின்ற பதிவு நடவடிக்கைகளை த. தர்மேந்திரா மறுநாள் முதல் ஆரம்பித்தார்.

காரைதீவில் உள்ள கடற்றொழிலாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுநல செயற்பாட்டாளர்கள் விசேட உத்தேச வேலை திட்டங்களுக்கான முன்மொழிவுகளை தயார் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓய்வு நிலை பிரதி அதிபரும், காரைதீவு விஷ்ணு ஆலயத்தின் முன்னாள் தர்மகர்த்தாவும் ஆகிய எஸ். தில்லையம்பலம் இவற்றுக்கான யோசனைகளை முன்வைத்து உள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :