கிண்ணியா றகுமானியா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக வா.சகாப்தீன் தெரிவு



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வரையறுக்கப் பட்ட றகுமானியா நகர் கிராம சேவகர் பிரிவு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக வாப்புத்தம்பி சகாப்தீன் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

இப் புதிய நிர்வாக தெரிவு கூட்டம் அண்மையில் கூட்டுறவு உத்தியோகத்தர் ஏ.எச்.அஜ்வத்கான் தலைமையில் தி /கிண்ணியா அல் அக்தாப் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

தலைவர் தெரிவுக்கு பலத்த போட்டி ஏற் பட்டது.இதில் நான்கு பேர் போட்டியிட்டனர். ஏழு பேர் கொண்ட குழு தெரிவு செய்யப் பட்டு அக் குழு மூலம் வாக்கெடுப்புக்கு விடப் பட்டு, ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்று இவர் தெரிவு செய்யப் பட்டார்.

2008 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இச் சங்த்தின் தலைவராக இருந்து செயல் பட்டவர்.
இப் பதவியிலிருந்து தொடர்ந்தும் இருப்பதில்லை என்றும், ஓய்வு பெறுவதாகவும் இவர் தெரிவித்தார்.கடற்றொழிலாளர்களின் வேண்டுகோளின் பேரிலேயே போட்டியிட்டு மீண்டும் என்னை தலைவராக தெரிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர் வாப்புத்தம்பி மற்றும் வதுறுநிஸா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பித்தக்கது..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :