கல்குடா - நோன்பு பெருநாள் தொழுகை



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று சனிக்கிழமை (21.04.2023) ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலாள பெருநாள் தொழுகை இன்று காலை 06.45 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸம்மில் நடாத்தினார்.

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஏழு பள்ளிவாயல்ளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் பெருநாள் தொழுகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கும் உலக மக்களின் அமைதிக்காகவும் விஷேட துஆ பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :