மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய புதிய அதிபராக, அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் பொறுப்பேற்றார் !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் அவர்கள் இன்று வியாழக்கிழமை (06) முதல் பொறுப்பேற்றார். கல்முனை கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.என்.எம். மலிக் முன்னிலையில் பாடசாலை பிரதியதிபர் தன்ஸீல் இடமிருந்து பொறுப்புக்களை கையேற்றார்.

பேராதெனிய பல்கலைக்கழக கலைமானி சிறப்பு பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து சமூக சேவை திணைக்களம், கட்டிடங்கள் சேவை திணைக்களத்தில் பணியாற்றிய பின்,பட்டதாரி ஆசிரியர் சேவையில் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருது கமு/ கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம், கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணி புரிந்தார். மிக குறுகிய காலத்தில் அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து சாய்ந்தமருது கமு/ கமு/ அல்- ஜலால் வித்தியாலயம், மாவடிப்பள்ளி கமு/ கமு/ அஸ்ரப் மகா வித்தியாலயம், கல்முனை கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயம், கமு/அக்/அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, கமு/ கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் போன்றவற்றில் அதிபராக கடமையாற்றியிருந்தார்.

கல்வி நிர்வாக சேவை (SLEAS-3 சேவை மூப்பு) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் பிரதேசத்தில் நன்மதிப்பை பெற்ற அதிபர்களில் ஒருவராக திகழ்கிறார். இவருக்கான நியமனக் கடிதம் கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :