சாய்ந்தமருது USF Srilanka அமைப்பின் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வருடாந்த இப்தாரும் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கபூர் ஏ அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்றது
இந் நிகழ்வில் அமைப்பின் மேம்பாட்டுக்கு உழைத்த செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கான நியமனக்கடிதம் இந்நிகழ்வில் வைத்து அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் இப்தார் சிந்தனையை மௌலவி பிர்தௌஸ் ரஸா நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் அதிதிகளாக பொதுச் சேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.எம். சம்சுதீன், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் உதவிப் பணிப்பாளர் யு.எல். லத்தீப், ஓய்வுபெற்ற அதிபர் எம்.நவாஸ், றிஸ்லி முஸ்தபாவின் இணைப்பு செயலாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியான ஏ.எல். ஜவாஹீர், அமைப்பின் போசகரும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளர் எம்.பீ. நௌசாத் உட்பட ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment