கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூன் 12ஆம் திகதி திறக்கப்படும்! கதிர்காமத்தில் இன்று தீர்மானம்!



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஜூன் 29 ஆம் திகதி மூடப்படும்

இன்று (9) செவ்வாய்க்கிழமை பகல் கதிர்காமத்தில் மொனராகலை அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் முன்னிலையில்
இடம் பெற்ற கூட்டத்தில் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பிலான முன்னோடிக்கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி பகல் உகந்தை முருகன் ஆலய
வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

கதிர்காமம் முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

அதேவேளை உகந்தை மலை முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :