கல்முனை கல்வி கலாசார மேம்பாட்டுத் தாபனத்தினால் (எக்டோ) ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் எக்டோ நூலகத்தின் 20 ஆம் ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை நூலகத்தில் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளுதல், வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் நூல்களை சேகரித்தல் போன்ற நோக்கத்திற்காக 27.05.2023 தொடக்கம் 04.06.2023 வரை “எக்டோ நூலக வாரம் - 2023” எனும் தொனிப்பொருளில் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 27.05.2023 அன்று எக்டோ நூலகத்தின் கேட்போர் கூடத்தில் தாபனத்தின் தலைவர் எஸ்.எல்.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களும் விஷேட அதிதிகளாக கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபர் எம்.எஸ்.எம். பைசால், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் வித்யாலய அதிபர் ஏ.ஜி.எம். றிசாத், கல்முனை அஷ்-ஷுஹரா வித்யாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்யாலய பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் அவர்களும் மற்றும் கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நூலக அங்கத்தவர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலந்துகொண்ட அனைத்து அதிதிகளாலும், வாசகர்கள், மாணவர்களாகிய அனைவருக்கும் தங்களது வாசிப்புப் பழக்கத்தினை அதிகரிப்பதற்கும் அறிவுத்திறனை விருத்தி செய்வதற்கும் இதர கல்வித் தேவையினை தேடிப் படிப்பதற்கும் இவ் அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இதன் மற்றுமொரு அங்கமாக, இக்குறித்த காலப்பகுதியினுள் நூலகத்தில் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும் மாணவர்கள், வாசகர்கள் மற்றும் அங்கத்துவத்தை புதுப்பிப்பவர்களுக்கு அங்கத்துவக்கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு புதிதாக இணைந்து கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக 10 மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நூலகத்திற்காக புத்தகங்களை சேகரிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் கல்முனை அஷ்-ஷுஹரா வித்யாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா அவர்களாலும், அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியின் பழைய மாணவி பாத்திமா நஸ்கத் அவர்களாலும் ஒரு தொகுதி நூல்கள் எக்டோ நூலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
மேலும், இத்தாபனம் மற்றும் நூலகத்தின் வளர்ச்சியில் சிரேஷ்ட ஆலோசகர்களாக இருந்து வழிநடாத்திய பேராசிரியர் மர்ஹூம் ஏ.எல்.எம். அப்துல் கபூர், முன்னாள் அதிபர் மர்ஹூம் எம்.வை.எம்.எச். காரியப்பர் ஆகியோரை நினைவு கூறும் முகமாக இந்நிகழ்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment