கல்வி சேவையில் 35 வருடங்களைப் பூர்த்தி செய்த பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன் இன்று (30) செவ்வாய்க்கிழமை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் .
வெல்லாவெளியைச் சேர்ந்த வரதராஜன் 1988இல் ஆசிரியராக நியமனம் பெற்றார். பட்டதாரியாக முதுகல்விமாணி பட்டதாரியாக வாண்மை விருத்தியை மேற்கொண்டு பட்டிருப்பு வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் முதலுதவி பயிற்றுவிப்பாளராகவும் குடும்ப நல ஆலோசகராகவும் சேவையாற்றி வந்தார்.
ஆரம்ப இடைநிலை கல்வியை வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்திலும் , உயர் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றிருந்தார்.
இன்னும் இரண்டு வருட காலம் ஓய்வுக்காக இருக்கையில் அவர் 58 வயதில் இன்று ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment