மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் 36 இடங்களைப் பெற்று சாதனை



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளரும், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளருமான என்.எம்.ஏ.மலிக் தலைமையில் கடந்த மே 15,16 ஆம் திகதிகளில் சாய்ந்தமருது அல்- ஜலால் மற்றும் பௌஸி மைதானங்களில் நடைபெற்ற கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் மொத்தமாக 36 இடங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2022 இல் நடைபெற்ற மேற்படி போட்டிகளில் 31 இடங்களைப் பெற்றுக் கொண்ட அப்பாடசாலை மாணவர்கள் இம்முறை (2023) 36 இடங்களை பெற்று சாதனை நிலை நாட்டியுள்ளனர். இதில் 10 முதலாம் இடங்கள், 13 இரண்டாம் இடங்கள், 13மூன்றாமிடங்கள் உள்ளடங்குகிறது. மட்டுமின்றி 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தையும் தனதாக்கி கொண்டுள்ளனர்.

அப்போட்டிக்காக மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி பாட ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் போன்றோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் எம்.ஐ. சம்சுதீன் உட்பட பாடசலை முகாமைத்துவ குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :