தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலுள்ள கட்சியின அலுவலகத்தில் நடைபெற்றது.
ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த சிறிபாரத்தினத்தின் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் தலைமையில் நடைபெற்றது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர், மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் , மறறும்முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment