திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று (01) மாலை உப்புவெளி ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.
குறித்த செயலமர்வானது மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது." இலங்கையின் வெளிவிவகார கொள்கையை விளங்கிக் கொள்ளுதல்" எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக மூலோபாயக் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் ஆ.யதீந்திரா கலந்து சிறப்பித்தார்.
இதன் போது இலங்கையினுடைய வெளிநாட்டு கொள்கைகள் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பில் விரிவான விடயங்களை திறம்பட வளவாளரால் தெளிவுபடுத்தப்பட்டதுடன். பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றவற்றின் இராஜதந்திர அரசியல் கொள்கைகள் மூலம் சர்வதேச உறவுகள் ஏனைய நாடுகளின் உதவி ஏன் தேவை போன்ற விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.
இதில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment