இந்துக்களின் பாரம்பரிய யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் நேற்று (9) செவ்வாய்க்கிழமை காலை ஆனையிறவை வந்தடைந்தனர்.
வழமைபோல இம்முறையும் கடந்த 06ஆம் திகதி சனிக்கிழமை விசேட பூஜையுடன் ஆரம்பமாகிய இப் பாதயாத்திரை, நேற்று நான்காவது நாளில் ஆனையிறவை வந்தடைந்தது.
குழுவில் இதுவரை 68 யாத்திரீகர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் மேலும் பல அடியார்கள் இணைய உள்ளனர் என தலைவர் ஜெயாவேல்சாமி ஆனையிறவில் இருந்து நேற்று தெரிவித்தார்.
இன்று (10) புதன்கிழமை ஐந்தாவது நாள் முரசுமோட்டை முருகன் ஆலயத்தை வந்தடைந்து தங்குவர்.
கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம்.
இதேவேளை, கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. எனவே, யூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று யூலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment