நீதிக்கான மய்யத்தினால் ஊடகவியலாளர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்



நூருல் ஹுதா உமர்-
நீதிக்கான மய்யத்தினால் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் (10) புதன்கிழமை இடம்பெற்றது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மய்யத்தினால் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதிக்கான மய்யத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சட்டத்தரணி எம்.ஷிபான், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர் செயற்குழு உறுப்பினர்களான எம்.வை. அமீர், எஸ்.ஜனூஸ் உள்ளிட்ட ஊடகவியலாளர்களான அஸ்லம் எஸ்.மெளலானா, பாறூக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதிக்கான மய்யத்தினால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு "மகிழும் இதயம்" திட்டத்தினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :