இலங்கை வங்கியின் கிண்ணியா கிளை இடமாற்றம் செய்யப் பட்டு மீள் திறப்பு விழா நிகழ்வு ( 8 ) கிண்ணியா சிறுவர் பூங்காவுக்கு முன்னாலுள்ள் மட்டக்களப்பு வீதியில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு இலங்கை வங்கியின் பிரதிப் பணிப்பாளர் பிரியலால் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் வாடிக்கையாளர்கள் பண வைப்பு செய்ய வந்தவர்களுக்கும்,ரண் கெகுளு கணக்கு திறந்தவர்களுக்கும் மற்றும் ஏனைய சேவைகளுக்கும் அன்பளிப்பு பொருட்களை இலங்கை வங்கியின் பிரதிப் பணிப்பாளர் பிரியலால் சில்வா மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் சிந்தியா மார்டீன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
இலங்கை வங்கியின் பிரதிப் பணிப்பாளர் பிரியலால் சில்வா, கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் சிந்தியா மார்டீன்,இலங்கை வங்கியின் கிண்ணியா கிளை முகாமையாளர் பி.ரம்யா,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி,கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை செயலாளர்கள்,வங்கி முன்னாள் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இந் நநிழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment