தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் த. ஜெயசிங்கம் பங்கேற்பு!

லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 2023.05.14 ஆம் திகதி உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் அவர்களது வழிகாட்டலில் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இரண்டாம் நாள் அமர்வில் (நான்காவது அமர்வில்) பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 332 மாணவர்கள் பட்டங்கள் பெற்றுக்கொண்டனர்.. ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ - வர்த்தக பீடங்களில் இணைந்து கல்வி கற்ற 374 வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம்  அவர்கள் விஷேட உரையாற்றினார்.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் கற்ற Pothanthy Maheswaran 2015/2016  ஆம் ஆண்டில் இரசாயன பிரிவில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான் பாவா ஞாபகார்த்த விருதைப் பெற்றுக்கொண்டார். 2015/2016  விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான எம்.எச்.எம்.அஷ்ரப் விருதை Kuruppu Mohottalalage Jinidu Ishara Bimali Senaratna  பெற்றுக்கொண்டார்.

பொறியியல் பீடத்தில் 2015/2016  ஆம் ஆண்டின் சிறந்த மாணவருக்கான விருதை Wijethunga Wasala Mudiyanselage Dhanushika Darshani யும் அதே ஆண்டில் Thurairadnam Vithushan சிறந்த Civil Engineering விருதையும் Electrical and Electronic Engineering பிரிவில் சிறந்த மாணவருக்கான விருதை Yatipiyangala Pangolle Gedara Pradeep Lakshan Kodithuwakku  வும் பெற்றுக்கொண்டார்.

முதல்நாள் நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் தலைமையில் வேந்தர் கௌரவ பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வுகளின்போது 

களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க அவர்களும்  உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ் அவர்களும்  பிரதம பேச்சாளர்களாக  கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தியிருந்தனர்.

பட்டமளிப்பு விழா நிகழ்வுகளில் முதல் அமர்வில் கலை கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச் சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 371 மாணவர்களும், மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 380  மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

கலை கலாசார பீடத்தில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கையில்  சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எல்.ஏ.காதர் விருதை முகம்மட் அலி பாத்திமா அஸ்மியா பெற்றுக்கொண்டார். இதேவேளை தமிழில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் முகம்மட் ஹுசைன் பாத்திமா றிஸ்லா பெற்றுக்கொண்டதுடன் அதே கல்வியாண்டில் இந்து கலாச்சார கற்கைக்கான சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை பேபி சாலினி ராமக்கவுண்டர் பெற்றுக்கொண்டார். 

இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த டிவயாளி கிடாரா மலீசா லக்சாணி வசந்த குமாரி 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில்  ஞாபகார்த்த விருதை பெற்றுக்கொண்டதுடன் முகம்மட் நஜீம் பாத்திமா நுஸ்ரா முகாமைத்துவ துறையில் அல் ஹாஜ் ஏ.எல். இப்ராலேப்பே ஞாபகார்த்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மட் ஆகில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில் அரபு துறையில் சிறந்த மாணருக்கான எம்.எச்.அப்துல் காதர் ஆலிம் ஞாபகார்த்த விருதையும் முகம்மட் இப்ராகிம் பாத்திமா ஷீபா Islamic Thought & Civilization துறையில் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஞாபகார்த்த விருதையும் கலந்தார் லெப்பே பாத்திமா மஸ்லிஹா Islamic Banking and Finance  துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை கிறிஸ்னபிள்ளை மகாலிங்கம் Master Of arts மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் முஹம்மட் மூஸா  Master Of Philosophy  பட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதேநேரம், வியாபார நிருவாகம், முகாமைத்துவம், தமிழ் உள்ளிட்ட துறைகளில் பட்டப்பின்படிப்புக்களை நிறைவு செய்த மாணவர்களுக்கான முதுமாணி, முதுதத்துவமாணி பட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு, பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை சுகாதார வழிகாட்டலுக்கமைய இடம்பெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் முஷர்ரப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள் பெறோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




























































































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :