இதன் போது
உள்ளூராட்சி தேர்தல்களுக்கான எல்லை நிர்ணய கமிட்டிக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி பின்வரும் யோசனைகளை முன் வைத்தது.
1. எல்லை நிர்ணய கமிட்டியின் நோக்கம் உள்ளூராட்சி தேர்தலின் வட்டார உறுப்பினர்களை குறைப்பது என சொல்லப்படுகிறது.
அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாயின் பழைய முறைப்படி விகிதாசார தேர்தல் முறையே சிறந்ததாகும்.
2. சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையிலான தேர்தல் என்பது விகிதாசார தேர்தல் முறையே சரியானது.
3. அத்துடன் சிறு கட்சிகளுக்கும் உறுப்புரிமை கிடைக்கும் வகையில் விகிதாசார முறையுடன் மேலதிக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒரு உள்ளூராட்சி சபைக்கு தெரிவாகும் மொத்த உறுப்பினர் தொகையில் 20 வீதமானோர் உறுப்பினர் பெறாத கட்சிகளுக்கு வழங்கப்படும் வகையில் தேர்தல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன்;
04. கல்பிட்டி பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்படல் வேண்டும்
இலங்கையின் மிகவும் நீளமான (73 கி.மி.) பிரதேச சபையாக கல்பிட்டி பிரதேச சபை இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. கடையாமோட்டை உப சபை அமைக்கப்பட்டாலும் அதன் மூலம் மக்கள் முழுமையான பயனை அடைய முடியாத நிலையள்ளது. எனவே கடையாமோட்டை பிரதேச உப சபையை கடையாமோட்டை பிரதேச சபையாக மாற்றி மக்கள் சிரமத்தை போக்க வழியமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
05. கல்பிட்டி பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட வேண்டும்
கடல் வளம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் பிரதேசமாக கல்பிட்டி பிரதேசம் விளங்குகிறது. எனவே இப்பிரதேசத்தை நகரசபையாக மாற்றி அதற்குண்டான அபிவிருத்தி பணிகளை செய்வதனூடாக இலங்கையின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கல்பிட்டி நகர் பெரும் பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறோம்.
06. புத்தளம் நகர சபை மாநகர சபையாக மாற்றப்பட்டது. இருப்பினும் புத்தளம் நகர எல்லைக்குள் இருக்கும் முள்ளிபுரம் மற்றும் மணல்தீவு ஆகிய வட்டாரங்கள் புத்தளம் பிரதேச சபையுடனே இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நகர எல்லைக்குள் இருக்கும் அப்பிரசங்களுக்கு சுத்திகரிப்பு பணிகள் உட்பட்ட அனைத்துவிதமான பணிகளும் நடைபெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே குறித்து வட்டாரங்களை புத்தளம் மாநகரசபையுடன் இணைப்பதன் மூலம் அபிவிருத்திகளை சிரமமின்றி தொடரலாம் என்று நம்புகிறோம்.
07. உள்ளூராட்சி சபைகளின் எல்லை பிரச்சினை எனும் போது நீண்ட காலமாக சாய்ந்தமருது பிரச்சினை உள்ளது. இது சம்பந்தமாக வழக்கொன்றும் உள்ளது. அதே போல் கல்முனை தமிழ் மக்களுக்கென செயலக கோரிக்கையும் உள்ளது.
பிரதேச சபைகளோ, பிரதேச செயலகங்களோ இன ரீதியாக அமைக்கப்பட முடியாது என்பதை நாம் அறிவோம்.
இந்த வகையில் கல்முனையை மூன்று பிரதேசங்களாக பிரித்து எல்லையிட்டு உள்ளூராட்சி சபை வழங்கும் யோசனையை எமது கட்சி முன் வைக்கிறது.
அவையாவன.
1. மாளிகைக்காடு முதல் ஸாஹிரா கல்லூரி வரையான எல்லையில் "சாய்ந்தமருது நகர சபை"
2. ஸாஹிரா வீதி முதல் தாளவட்டுவான் வீதி வரை நற்பிட்டிமுனை உள்ளலடங்கலாக " கல்முனை நகர சபை அல்லது மாநகர சபை"
3. தாளவட்டுவான் வீதி முதல் மருதமுனை வரை "பாண்டிருப்பு பிரதேச சபை" அத்துடன் பாண்டிருப்பு செயலகமும்.
மருதமுனை, நீலாவணை மக்கள் விரும்பினால் கல்முனையுடன் அல்லது பாண்டிருப்புடன் இணைய முடியும்.
மேலே நாம் சொன்ன யோசனைகளை எல்லை நிர்ணய கமிட்டி ஏற்றுக்கொண்டு இவற்றை அறிக்கையிடும் படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி தயவாய் கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment