ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் PSP இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் இன்று 2023.05.09 பிரதம அதிதிகளாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் ராவூ ஹக்கீம் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலி ஸாகிர் மௌலானா
அதிதிகளாக முன்னாள் நகர சபை தவிசாளர் M.S. நளீம், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏறாவூர் நகர சபையின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் M.I. ஹமீம், ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஜலீல் ஹாஜியார்
வாசிப்பு வட்டம் சப்ரி PSP அமைப்பின் தலைவர் சாறுக் ஹாஜியார்
செயற்பாட்டாளர் K. அப்துல் வாஜித், ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் M.அஜ்வத் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
புத்தகங்கள் விற்பனை, கண்காட்சி என்பதையும் தாண்டி பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன. தமிழ், முஸ்லிம், சிங்கள பாரம்பரிய கலைகள், புத்தக வெளியீடுகள், ஆய்வுக் கருத்தரங்குகள், திரையிடுதல், உரையாடல்கள், சிறுவர்களுக்கான தனி அரங்குகள், சமகால தமிழ், சிங்கள இலக்கியங்கள், சிங்கள சினிமாக்கள், சமூகங்களுக்கிடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள், வாசிப்பை மேம்படுத்தும் வகையிலான மாணவர்களுக்கான நிகழ்வுகள், பட்டிமன்றம், நாடகம், பாடல்கள், பல்கலைக்கழகங்களின் நிகழ்வுகள், பெண்கள் சார்ந்த நிகழ்வுகள், ஓவியம், புகைப்படக் கண்காட்சி, மலையக இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் எனப் பலவகையான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இஸ்லாமிக் புக் ஹவுஸ், குமரன் பதிப்பகம், சமுத்ரா புத்தக நிலையம், பேஜஸ் புத்தக நிலையம், ஃப்ளாஸ் புக்ஸ், பாத்திமா புத்தக கடை, Books for children's, அல் அமீன் புத்தக நிலையம் போன்றவை இதில் அமையப்பெற்றுள்ளதுடன். தேவையான புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.வாசகர்களை அன்புடன் அழைக்கின்றனர் ஏறாவூர் வாசகர் வட்டத்தினர்.
0 comments :
Post a Comment