அம்பாரை மாவட்டத்தின் மல்வத்தை திருவள்ளுவர் புரம் அருள்மிகு மகாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம் நாளைய தினம்(3) புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு பாமா ருக்மணி சமேத விஷ்ணு வெண்கலச் சிலைகள் எழுந்தருளிக்காக அன்பளிப்பு செய்யப்பட்டது.
ஆலய நிர்வாகம் கல்முனை சொர்ணம் குழுமங்களின் ஸ்தாபக தலைவர் எம். விஸ்வநாதனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க , அச் சிலைகளை இந்தியாவிலிருந்து தருவித்து அவரே நேற்று நேரில் சென்று கையளித்தார்.
520 கிலோ எடையுள்ள சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான இம்மூன்று சிலைகளையும், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரா கிருபேந்திர சர்மா மற்றும் ஆலயத்தலைவர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா ஆகியோரிடம் சொர்ணம் விஸ்வநாதன் ஆலய சந்நிதியில் வைத்து கையளித்தார்.
அச்சமயம் கல்முனை சொர்ணம் நகைமாளிகை முகாமையாளர் கோ.குணபாலச்சந்திரன் ,இந்துசமய ஆர்வலர்களான காத்தவராயன், அழகுராஜா, சசிகுமார் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.
திருவள்ளுவர்புர மக்களின் அயராத உழைப்பும் ஏனைய மக்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து நடாத்தும் மகா கும்பாபிஷேகத்தின் வாஸ்து சாந்தி உடனான ஆரம்ப கிரியைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரா கிருபேந்திர சர்மா தலைமையில் நேற்று (1) திங்கட்கிழமை ஆரம்பமானது.
இன்று (2) செவ்வாய்க்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும்.
நாளை (3) புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment