இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு.



எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
லங்கை,சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு இவர் தெரிவாகியுள்ளமை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துமென நம்பப்படுகிறது.

சவூதிஅரேபியாவின் மன்னர் பஹட் பெற்றோலியம் மற்றும் கனியவளப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற இவர், அந்நாட்டுடன் நெருக்கமான உறவிலுள்ளவர். சவூதிஅரேபியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனங்களின் தலைவர்கள் பலர், அமைச்சருடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற சக நண்பர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அரபுமொழியில் பாண்டித்தியமும், ஹாபிழுமான அமைச்சர் நஸீர் அஹமடின் பாண்டித்தியம் இலங்கை முஸ்லிம்களின் கலாசார அபிலாஷைகளை அடைந்துகொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு சவூதியுட்பட அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெறவும் இவரது தெரிவு வழிகோலும்.காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் மற்றும் உள்நாட்டுக் கனிய வளங்களை சர்வதேச சந்தைப்படுத்தும் வியாபார வியூகங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :