ஸாஹிரா கல்லூரி வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம் : அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய எந்திரி முனாஸ் !!



நூருல் ஹுதா உமர்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதற்காக ஸாஹிரா கல்லூரி வீதியினை ஒரு வழிப்பாதை மாற்றுவதற்கான பெயர்ப் பலகையினை கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் இன்று (03) புதன்கிழமை பொறுத்தியுள்ளது.

இதற்கமைவாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரங்களில் காலை 7.00 மணி முதல் காலை 8.00 மணி வரை மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வெள்ளிக்கிழமை பாடசாலை விடும் நேரமான காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை குறித்த நேரங்களில் பிரதான வீதியிலிருந்து ஸாஹிரா கல்லூரி வீதிக்கு எந்தவித வாகனங்களும் உட்செல்ல முடியாதவாறு ஒரு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி எம்.எம்.முஹம்மட் முனாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகள் ஆரம்பிக்கும் மற்றும் பாடசாலை விடும் நேரங்களில் வாகன சாரதிகள் பிரதான வீதியிலிருந்து ஸாஹிரா கல்லூரி வீதிக்கு உட்செல்வதை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்த முடியும் எனவும் எந்திரி எம்.எம்.முஹம்மட் முனாஸ் தெரிவித்துள்ளார். மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் (வேன், கார்) முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள் பாடசாலையை விட்டு இரு மறுங்கிலும் 50 மீட்டர் தொலைவில் வாகனச் சாரதிகள் மாணவர்களை இறக்கி விடுதல் தொடர்பான பெயர்ப் பலகையும் பொறுத்தப்பட்டுள்ளதாக எந்திரி எம்.எம்.முஹம்மட் முனாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி எம்.எம். முஹம்மட் முனாஸ் பாடசாலை சமூகத்தினரினதும் பெற்றோர் களினதும் நீண்ட கால தேவையை அறிந்து அவர்களின் அசெளகரியங்களை போக்குமுகமாக அவரது நேரடி வழிகாட்டலிலும் கண்காணிப்பிலும் இப்புதிய போக்குவரத்து நடைமுறை விரைவில் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பிலான கலந்துரையாடலொன்று சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.

அந்த கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார், கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர், கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி அதிபர் யூ.எல்.எம். அமீன், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம், கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஒழுக்காற்று பிரிவு ஆசிரியர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையிலையே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :