திருகோணமலை வெருகல் பிரதேச செயலக பகுதியில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் (03) பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்ட நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரின் கோரிக்கைக்கு அமைவாக திரு குணாளன் அவர்களின் முயற்சியின் பலனாக மறைந்த திரு சுரேஸ்குமார் அவர்களின் நினைவாக கண்டியா தொண்டு நிறுவனத்தினால் ஈச்சிலம்பற்று சன்பகா வித்தியாலயம் ,இலங்கை துறைமுகம் இந்துக் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் வித்தியா லயத்தில் கல்வியில் மிகவும் வறிய நிலையில் உள்ள தனிப்பெற்றோரை தலைவராக கொண்ட குடும்பங்களின் உள்ள 66 மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் த.பிரணவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment