மின்னல் தாக்கியதில் கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று (29) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து வந்த நிலையிலே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்போபுர-படுகச்சிய பகுதியைச் சேர்ந்த முகம்மது லத்தீப் முஹம்மது மபாஸ் (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அக்போபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment