டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதை தடுப்பதுடன் மிக நீண்டகால விடுமுறைகளில் பாடசாலைகள் இருந்தமையால் மாணவர்களுக்குச் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிரமதான நிகழ்வு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) முதல் பரவலாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் பாடசாலை அதிபர் எம்.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இச்சிரமதான நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அறுஸ்தீன் வழிகாட்டலில் அப்பிரிவிற்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் பங்கேற்று காடு மண்டி காணப்பட்ட பாடசாலை வளாகத்தை துப்பரவு செய்து வருகின்றனர்.
மேலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இச்சிரமதான நடவடிக்கையின் போது விச ஜந்துக்கள் அழிக்கப்படுவதுடன் பாடசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு தத்தமது பங்களிப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment