இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன் அவர்களும் கௌரவ அதிதிகளாக சிரேஸ்ட உதவி நூலகர்களான எம். சி. எம். அஸ்வர் , கலாநிதி எம் எம் மஸ்ரூபா , ஏ .எம் நஹ்பீஸ், எஸ். எல் எம். சஜீர் அவர்களும் விசேட அதிதிகளாக உதவி நெட்வேர்க் மேனேஜர் எம். ஜே. சாஜித் மற்றும் நூலக கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன் அவர்களினால் ஓய்வு பெற்றுச் செல்லும் நிசாமுதீன் அவர்ளுக்கு பூமாலை அணிவித்து வரவேற்கப்பட்டு நூலக உத்தியோகத்தர்களினால் கூட்ட மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக நூலகர் அவர்கள் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் அதன் அபிவிருத்திகளையும் இன்று அடைந்திருக்கும் நிலைமைகளையும் பற்றி விரிவாக பேசியதுடன் ஓய்வு பெற்று செல்லும் நிசாமுதீன் அவர்களின் சேவை அவர் நூலகத்துக்கு ஆற்றிய பங்களிப்புகள் பற்றியும் பேசினார் அதனைத் தொடர்ந்து பேசிய கௌரவ அதிதிகளும் ஓய்வுபெற்றுச் செல்லும் நிசாமுதீன் அவர்களைப் பற்றியும் அவர் இந்த நூலகத்துக்கு ஆற்றிய சேவைகள் பற்றியும் கிலாகித்து பேசி அவருக்கும் அவரது மனைவி பிள்ளைகள் ஆகியோருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் நிசாமுதீன் அவர்களுக்கான பிரியா விடை கவிதையினை கவிஞரும் நூலக உத்தியோகத்தருமான பி. எம். ஹிதாயத்துல்லா அவர்கள் வாசித்தார்.
பிரியாவிடை பாடலினை நூலக உத்தியோகத்தர் றனீஷா சர்ஜுன் அவர்களின் காந்தக் குரலினால் பாடி அரங்கத்தில் இருந்த பிரதம அதிதி, கௌரவ அதிதிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வு பெற்றுச்செல்லும் நிசாமுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரையும் தேம்பித் தேம்பி அழ வைத்த சோகமான நிகழ்வு இடம்பெற்றது
ஓய்வு பெற்றுச் செல்லும் நிஜாமுதீன் அவர்களுக்கு பல்கலைக்கழக நூலகர் அவர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய நூலக உத்தியோகத்தர்களினால் பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இறுதியாக நிசாமுதீன் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தி நூலக குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
0 comments :
Post a Comment