அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கிழக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப்பட்டறை



சியாத்.எம்.இஸ்மாயில், பட உதவி. கே. மாதவன்-
சுகாதார அமைச்சின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப்பட்டறை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கடந்த 28ஆம்,29ஆம், 30ஆம் திகதிகளில் நடைபெற்றது.

தாதிய பணிப்பாளர் (மருத்துவ சேவை) எம்.பி.சீ. சமன்மலி அவர்களின் வழிகாட்டலில் தாதிய பரிபாலகர் பீ.ரீ. நௌபர் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில்,வளவாளர்களாக அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களான டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப், டொக்டர். எ.பி. மசூத், பொது சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.றிப்ஷான் ஜெமீல், மட்டக்களப்பு வைத்தியசாலை அவசர சேவை வைத்திய நிபுணர் ராஜ வர்மன், டொக்டர். எம்.எம்.தமீம், தாதிய பரிபாலகர் பீ.ரீ. நௌபர், கராப்பிட்டிய வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் பத்மா கமகே, தாதிய உத்தியோகத்தர். ஏ. மசூத் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.

திடீர் அனர்த்தம் ஒன்று எதிர்பாராதவிதமாக நடைபெறுகின்ற சமயத்தில் பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் முன் ஆயத்த தயார்படுத்தல்கள், முதலுதவி மற்றும் சுகாதார சிகிச்சையளிப்பு எவ்வாறு நடைபெற வேண்டும் என்ற அறிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது..

கொழும்பை அண்டிய பிரதேசங்களில் மாத்திரம் நடாத்தப்பட்டு வந்த இப்பயிற்சிப்பட்டறை, தாதிய மருத்துவ சேவை பணிப்பாளர் எம்.பி.சீ. சமன்மலி முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்த்தில் அக்கரைப்பற்றில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சிப்பட்டறையினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 56 தாதிய உத்தியோகத்தர் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :