போன் போதையால் வடக்கு கிழக்கில் வாசிப்புவீதம் குறைந்து வருகிறது ! நூல் வெளியீட்டு விழாவில் கலையரசன் எம்பி கவலை!



வி.ரி.சகாதேவராஜா-
போதைப்பொருட்களைவிட மிகவும் மோசமானது செல்போன் என்ற போதையாகும். இந்த செல்போன் கலாச்சாரத்தால் வடக்கு கிழக்கில் வாசிப்பு கலா சாரம் பொதுவாக குறைந்து வருகிறது.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கவலை தெரிவித்தார் .

காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பைந்தமிழ்க்குமரன் ஜே.டேவிட் எழுதிய "கறையான்தின்றகனவுகள்" என்ற சிறுகதை
நூல் வெளியீட்டு விழாவானது அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் காரைதீவு இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதியசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அங்கு நூல் வெளியீட்டுரையை எழுத்தாளரும் உதவி கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா நிகழ்த்தினார்.

முதல் பிரதியை பிரதம பொறியியலாளர் பி.இராஜமோகன் பெற்றுக் கொண்டார்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மேலும் தெரிவிக்கையில்..

இலங்கையில் தமிழ் மக்கள் பாரிய யுத்தத்தை எதிர்கொண்டு சின்னாபின்னமாக போயிருக்கின்றார்கள். அவர்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவதற்கு இலக்கியம் வழி சமைக்க வேண்டும்.

இன்று பாடசாலை மாணவர்கள் இந்த செல்போன் கலாச்சாரத்தால் மிகவும் மோசமாக படிப்பை இழந்து வருகிறார்கள். வாசிப்பை தவிர்க்கிறார்கள். சமுதாயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலரும் எப்பொழுதும் ஃபோனை நோண்டிக் கொண்டிருக்கின்ற ஒரு அவலத்தை பார்க்கின்றோம். சமூகத்தின் நல்லது நடக்கின்ற பொழுது அதை தட்டிக் கொடுப்பதை விடுத்து அதில் குறை காண்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கிறோம். எமது சமூகம் வளர வேண்டுமாக இருந்தால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதனூடாக நாங்கள் வெற்றி அடைய வேண்டும்.
திரு ஜெ டேவிட் அவர்கள் இறுக்கமாக கல்வி பணிக்குள் இலக்கிய பணியையும் ஆற்றிவருவது பாராட்டுக்குரியது என்றார்.

நூலாசிரியர் டேவிட் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நூல் நயவுரைகளை முன்னாள் தமிழ் உதவிக்கல்விப் பணிப்பாளர் கண. வரதராஜன் திறனாய்வாளர்களான ஆத்ம ரூத் சந்திரிகா ஜெஸ்மி எம் முஸா
ஆகியோர் நிகழ்த்தினர்.

விசேட அதிதிகளாக கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் பிரதம பொறியியலாளர் பி.ராஜமோகன் , நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஷரிபுதீன் , காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து, நீர்பாசன திணைக்களப் பொறியியலாளர் வி. விஜயசாந்தன் , சம்மாந்துறை கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரீ.சகாதேவராஜா , கல்முனை கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் ஏ.சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :