உள்ளூர் வீதிகளிலும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் .இது உங்கள் உயிரை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதுகாக்கும் .இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேச போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ். ஜெகத் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச போலீஸ் ஆலோசனை சபையின் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது .
அதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்தி வந்தால் தயவுதாட்சண்யமின்றி அவர்களையும், வாகனத்தையும் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டிய நேரிடும்.
அதிர்ஷ்டவசமாக காரைதீவு பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை மிகவும் அரிதாக இருக்கின்றது.போதைப் பொருளை எனது ஊருக்குள் நுழைய விட்டால் எமது எதிர்காலமே சூனியமாகும் எனவே ஒவ்வொருவரும் சிந்தித்து, இந்த போதை பொருள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு அறிவிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
எது எப்படி இருப்பினும் எமது ரோந்து சேவைகளும் எமது சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடரும் .அதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பதிலுக்கு ஆலோசனை சபையினரும் சில ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.
பாடசாலை மாணவர் மத்தியில் சமாந்தரமாக செல்வது பற்றிய வீதி ஒழுங்கு முறை, போதைப்பொருள் பாவனையின் அபாயம், போன்ற விடயங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடத்த வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பாடசாலை விடுகின்ற வேளையில் கொம்பு சந்தியில் போலீஸ் கண்காணிப்பை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment