"இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" நூலின் அறிமுக விழாவும் விசேட உரையும்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" எனும் நூலின் அறிமுக விழாவும் விசேட உரையும் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், அம்பாறை மாவட்ட றாபிதத்துன் நளீமியின் தலைவரும் அம்பாறை, சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். இஸ்ஹாக் நளீமி வரவேற்புரையையும் அறிமுக உரையையும் நிகழ்த்துவதோடு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் எம். றமீஸ் அப்துல்லாஹ் நூல் பற்றிய அறிமுகத்தையும் "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" எனும் தலைப்பில் கலாநிதி ரவூப் ஸெய்ன் விசேட உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

அம்பாறை மாவட்ட றாபிதத்துன் நளீமியின் செயலாளரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ. அஸீம் நளீமி நன்றியுரை நிகழ்த்துவதோடு, நிகழ்ச்சி தொகுப்பை அஷ்ஷெய்க் றாபி எம். மப்றாஸ் நளீமி செய்கிறார்.
மேற்படி நூல் காலத்தின் தேவையாகக் கருதப்படுவதால் அனைவரும் கலந்து சிறப்பித்து பயன்பெறுமாறு றாபிதத்துன் நளீமியின் அம்பாறை மாவட்ட கிளையினர் அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :