கடற்கரையில் தென்னை மரங்களை நடும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ரநடுகை செயற்திட்டம் இரண்டாம் கட்டத்தின் கீழ் பயன்தரு தென்னை மரங்களை நட்டு கடலரிப்பை தடுத்து மருதமுனை கடற்கரையின் அழகினைப் பேணுவோம் எனும்தொனிப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மற்றும் திங்கட்கிழமை (29) காலை தொடர்ச்சியாக மருதமுனை கடற்கரை லைட் ஹவுஸ் அருகில் இடம் பெற்றது.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்துல் கபூர் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பின் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கான இணைப்பாளர் பி.எம். முகம்மட் ஜஃபரின் ஏற்பாட்டில் மருதமுனை கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போது மருதமுனை பகுதியை நேசிக்கின்ற பல்வேறு சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாரை மாவட்டத்தில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு மில்லியன் மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு மருதமுனை பகுதி கடற்கரை பிரதேசத்தை கடல் அரிப்பிலிருந்து தடுப்பதற்கும் கடற்கரையின் அழகினை பேணுவதற்குமாக தென்னை மரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதன் முதல் கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பினால் மருதமுனை பகுதி கடற்கரையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் ஒரு மில்லியன் மரங்களை அம்பாரை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் நடுவதற்கான நோக்கோடு இவ்வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

அம்பாரை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, இறக்காமம், திருக்கோவில், நிந்தவுர், சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை,பானம, அக்கறைப்பற்று,சாய்ந்தமருது,பாலமுனை, ஒலுவில்,நாவிதன்வெளி, மாவடிப்பள்ளி,வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேசங்களில் இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீடுகள், பொது இடங்கள், கடற்கரைப் பிரதேசங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மத ஸ்தாபனங்கள்,வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :