சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் மாதாந்த கூட்டம் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நேற்று (27) வெள்ளிக்கிழமை சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தே அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி நிர்வாகிகளால் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பொருளாளர் ஏ.எம்.பசீல், முன்னாள் தலைவர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு தனவந்தர்களின் உதவிகளைப் பெற்று திட்டங்களை செயற்படுத்துவதிலும் மாவட்டத்தில் முன்மாதிரியான கருத்திட்டங்களை செயற்படுத்தி மாவட்டத்தில் சிறந்த அமைப்பாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸினால் நற்பெயர் வாங்க காரணகர்த்தாவாக செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீனின் ஆளுமையை பாராட்டியே சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினரால் இக்கெளரவம் அவருக்கு வழங்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினை மாவட்டத்தில் முன்மாதிரி அமைப்பாக வழிநடாத்தும் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீனின் ஆளுமையை அண்மையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் ஆகியோர் பாராட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீன் கருத்துத் தெரிவிக்கையில்:
இப்பாராட்டுக்கும் கெளரவத்திற்கும் நான் மட்டும் உரித்துடையவள் அல்ல.
மாறாக இப்பாராட்டினையும் கெளரவத்தினையும் பெறுவதற்கு எனக்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி வரும் வெளிக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இவ்விடத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அமைப்பினூடாக மேற்கொள்ளப் படும் வேலைத்திட்டங்களுக்கு எனக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டும் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், முன்னாள் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைப்பினூடாக மேற்கொள்ளப் வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தித்தரும் தற்போதைய சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், கணனி உதவியாளர் எஸ்.சாபித் அக்மல் உள்ளிட்ட சக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கு மேலாக பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு சிறந்த முறையில் திட்டங்களை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.சம்சுதீன், செயலாளர் ஏ.முபீதா, பொருளாளர் ஏ.எம்.பசீல், முன்னாள் தலைவர் ஏ.அலாவுதீன் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எமது பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் செயற்திட்டங்களை பாராட்டி, எமது செயற்பாட்டுக்கு ஊக்கமளித்து வரும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ் ஆகியோருக்கும் இதன்போது தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
0 comments :
Post a Comment