கிழக்கு மாகாணத்தில் குடி நீர் விருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நீர்வழங்கல் அமைச்சில் (25) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மாகாண பிரதம செயலாளர் மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களை சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள நீர்விநியோக பிரச்சினையை சரிசெய்ய, உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தண்ணீர் குழாய்களை வழங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருப்பம் தெரிவித்தார்.
மேலும் உள்ளூராட்சி மன்றத்தின் ஊடாக நீர்குழாய்கள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் என தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment