இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08.05.2023) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கொழும்பில் உள்ள அமைச்சகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை - இந்திய சமூதாய பேரவையின் சார்பில் சிவராமன் மற்றும் காந்தி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் எடுத்துரைத்த அவர்கள், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை வெளியிட்டனர்.
இதற்கமைய இன்றும் (09.05.2023), நாளையும் (10.05.2023) மலையக பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர். மேற்படி குழுவினரால் மக்களுக்காக உதவி திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கான முழு ஒத்துழைப்பையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment