காரைதீவில் களைகட்டிய சர்வதேச நடன தின "திக்கெட்டும் சதிரே" நாட்டிய சங்கமம்!



வி.ரி. சகாதேவராஜா-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் "திக்கெட்டும் சதிரே" என்ற நாட்டிய சங்கமம் கடந்த(1) திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது .

சர்வதேச நடன தினத்தையொட்டி காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில்
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
சீர் பெறு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி ஃப்ளோரன்ஸ் கென்னடி கலந்து சிறப்பித்தார்.

மேலும் முதன்மை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக அழகிய கற்கைகள் நிறுவனத்தின் நடனநாடகத்துறை தலைவர் கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷர்மிளா ரஞ்சிதகுமார் கலந்து சிறப்பிக்க சிறப்பு அதிதிகளாக உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர் திருமதி ரீஷா பத்திரண, விபுலானந்த மணிமண்டப தலைவர் வெ.ஜெயநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலைய விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய பரத நாட்டிய வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன் மற்றும் உதவி வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி ஆகியோர் நடனதின விழாவை நெறியாழ்கை செய்தனர்.

வரலாறு காணாத வகையில் மேடையேறிய அனைத்து நடனங்களும் சபையோரை சுண்டி இழுத்தன.

இந்த நிகழ்வில் மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பிக்க விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் பல கண்கவர் நடன நிகழ்ச்சிகள் மேடை ஏறின.

கலைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றி வரும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகிய கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி ஃப்ளோரன்ஸ் கென்னடி , நடனநாடகத்துறை தலைவர் கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஷர்மிளா ரஞ்சிதகுமார் ,பரத நாட்டிய வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன், உதவி வளவாளர் செல்வி ஜெயகோபன் தக்சாளினி ஆகியோர் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு ஜெயராஜ் நன்றியுரை ஆற்றினார்.

விழாவில் பங்கேற்ற 150 நடனத்துறை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.
நடனத்துறை மாணவர்களின் பெற்றோர்களால் மணி மண்டபம் நிரம்பி வழிந்தது.


விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :