மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிப்பு



க.கிஷாந்தன்-
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

நிலைய பொறுப்பதிகாரிகளின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காக மலையக பஸ்தரிப்பு நிலையங்களில் பல தனியார் மற்றும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :