கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் புதிய தவிசாளராக பொறியியலாளர் எம்.எம். நஸீர் தெரிவு!



பிராந்தியத்தின் முன்னணி அமைப்புக்களில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம் என்பன சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒன்றியத்தின் தலைமைக் காரியாலயத்தில் 2023.05.06 ஆம் திகதி; மாலை நடப்பாண்டுக்கான தவிசாளார் பொறியியலாளர் யூ.கே.எம்.. முஸாதிக் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஒன்றியத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக ஒன்றியத்தின் அங்கத்தினர்களாக இருந்து மரணித்தவர்களுக்காகவும் சுகயீனமுற்றிருக்கும் தோழர்களின் ஆரோக்கியத்துக்காகவும் பிராத்தனைகள் இடம்பெற்றன.

நடப்பாண்டுக்கான தவிசாளார் பொறியியலாளர் யூ.கே.எம்.. முஸாதிக் அவர்கள் தனது உரையின்போது ஒன்றியத்தின் கடந்து வந்த பாதைகள்; அங்கு இடம்பெற்ற முன்னெடுப்புக்கள், எதிர்காலத்தில் கைக்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் போன்ற விடயங்களை விரிவாக எடுத்துக் கூறினார்.

புதிய தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் அவர்களால் ஒன்றியத்துக்கு ஒருதொகை ரீ சேட்கள் வழங்கப்பட்டு; அவைகள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் யூ.கே.எம்.. முஸாதிக் அவர்களின் கரங்களால் அங்கத்தினர்களுக்கு அவைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்:


தவிசாளர்

பொறியியலாளர்

எம்.எம். நஸீர்


நிருவாகப் பணிப்பாளர்

பிரதம தபாலதிபர்

யூ.எல்.எம். பைஸர்


நிதிப் பணிப்பாளர்

ஓய்வுநிலை அமைச்சின் மேலதிக செயலாளர்

ஏ.எல்.எம். சலீம்


உதவித் தவிசாளர்

எம்.எம். ஜுனைடீன்


திட்ட அமுலாக்கல் பணிப்பாளர்

ஐ.எல். நயீம்


ஊடகப் பணிப்பாளர்

எம்.வை. அமீர்


சட்ட ஆலோசகர்

யூ.கே.எம். முஸாஜித்


பிரதி நிருவாகப் பணிப்பாளர்

எம்.எம். உதுமாலெப்பை


பிரதி நிதிப் பணிப்பாளர்

ஏ.எல்.எம். அன்வர்


பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்


ஐ. அலியார்

யூ.எல்.எம். ஹனிபா

எம்.ஏ.சீ. எல். நஜீம்

ஏ. பரீட்

ஏ.எம் றஸ்மி

எம்.ஏ. றபீக்


இங்கு உரையாற்றிய புதிய தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் அவர்கள் தன்னை ஒன்றியத்தின் தவிசாளராக தெரிவு செய்தமைக்காக அங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவித்தமையுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினார். இறுதியாக நிருவாகப் பணிப்பாளர் பிரதம தபாலதிபர் யூ.எல்.எம். பைஸர் அவர்களது நன்றி உரையுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

















































































 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :