முஸ்லிம் சமூகம் இழந்திருக்கும் புலமை சொத்து வை.எல்.எஸ். ஹமீட்



மாளிகைக்காடு நிருபர்-
பேச்சாற்றல், எழுத்தாற்றல், விவாதத்திறமை, சமூக உணர்வு, சட்ட தேர்ச்சி கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுச்செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் காலமானதாக வந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் மும்மொழி ஆற்றல், வினைத்திறனான போக்கு கொண்ட வை.எல்.எஸ். ஹமீட் எனும் ஆளுமை முஸ்லிங்களின் பெருந்தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் பிரத்தியோக செயலாளராக பொறுப்பேற்று அப்போதிருந்தே முஸ்லிங்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களில் நிறைந்த அக்கறையுடன் பணியாற்றிய ஒருவர். பெருந்தலைவர் அஷ்ரபின் மறைவுக்கு பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிலும் கிழக்கு, வடக்கு மாகாண முஸ்லிங்களின் அதிகார அலகு சம்பந்தமாக, கரையோர மாவட்ட அலகு சம்பந்தமாக மட்டுமின்றி தனது இறுதி மூச்சி வரை சமூக நலன் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தவர்.

முஸ்லிம் தனியார் சட்டங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, சட்ட பிரச்சினைகள் உட்பட பொதுமக்களினது உரிமைகள் தொடர்பிலானதும் நாட்டின் சட்டங்கள் தொடர்பிலும் பல்துறை சார்ந்த விடயங்களில் நிறைந்த அறிவை கொண்டிருந்த சட்டமுதுமானியான வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். வினைத்திறன் கொண்ட முஸ்லிம் தலைமைகளில் ஒருவர். பல்துறைகளிலும் பிரகாசித்து எம்மைவிட்டு மறைந்த அவரின் இழப்பு இந்த நாட்டு முஸ்லிங்களுக்கு பேரிழப்பாகவே உள்ளது. அவரின் இழப்பில் துயருற்ற எல்லோருடைய கவலையையும் நீக்கி இறைவன் நிம்மதியை கொடுக்க வேண்டும் என்றும் அவரது சமூகப்பணிகளை பொருந்திக்கொண்டு உயரிய சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :