திருகோணமலையில் பிளாஸ்டிக் முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு !



ஹஸ்பர்-
பிளாஸ்டிக் முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இன்று (24)நடைபெற்றது. இதனை றிங்கோ எயிட் ஏற்பாடு செய்திருந்தது

பிளாஸ்டிக் என்பது எம் வாழ்வோடு இணைந்து விட்டது. சில பல காரணங்களால் அவையை தவிர்க்க முடியாது. என்றாலும் நாம் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பது, அதனை சரியான முறையில் பயன்படுத்துவது மூலம் கட்டுப்படுத்த முடியும்.

திருகோணமலை நகரில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் ஆழ்கடல், கரையோர பகுதிகள், நிலப்பகுதிகளில் காணப்படுகிறது. திருகோணமலை நகர கடல் பகுதியில் உள்ள கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளே உள்ளது. அவை காலப்போக்கில் சிதைவடைந்து மீனுக்கு இரையாக மாறுகிறது. அந்த மீனை நாம் உண்கிறோம். நாம் பிளாஸ்டிக் அரிசி, முட்டை என கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் உண்மையில் நாம் பிளாஸ்டிக் மீன்களை உண்பது தெரியாமலே போகிறது.

திருமலை நகரம் சுற்றுலா தளமாக இருப்பதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக வீசப்பட ஒரு காரணமாக உள்ளது. என்றாலும் இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். ஆகவே முதல் கட்டமாக பாடசாலைகளில் பிளாஸ்டிக் முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளோம். அத்தோடு பிளாஸ்டிக் சேகரிக்கும் தொட்டிகளும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இனி வரும் காலங்களில் பல பாடசாலைகளிலும் இது தொடரும். பின்பு இதற்கான செயல்திட்டங்களை பொது வெளியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இன் நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய பலருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். எமது வலயக்கல்வி பணிப்பாளர் திரு. டி. ரவி அவர்களுக்கும், மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் எம் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

சிறப்பு நன்றியாக இன் நிகழ்வை எம்மோடு இணைந்து நடாத்தி தந்த லயோலா சுற்றுச்சூழல் மற்றும் நீதி மையத்தின் பணிப்பாளர் Rev.Dr. Thierry J.Robouam, S.J அவர்களுக்கு தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளோம் என குறித்த நிறுவனம் இதன் போது தெரிவித்திருந்தது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :