கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும்,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஆகியோருக்கிடையிலான சந்திப்பு கல்வி அமைச்சில் நேற்று(30) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாணத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கையாக விடுத்தார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முதற்கட்டமாக எதிர்வரும் கிழமைக்குள் கிழக்கு மாகாணத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதுடன் மீதிப் பற்றாக்குறையை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு திட்டமிடபட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுனரிடம் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளர்.
இச்சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர்,மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment