புனித துல்கஃதா மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு




ஏ.எஸ்.எம்.ஜாவித்-
புனித துல்கஃதா மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நேற்று (20) சனிக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழுத் தலைவர் மெளலவி எம்.பி.எம் ஹிஷாம் அல் பத்தாகி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நாட்டில் எப்பாகத்திலும் பிறை தென்படாத காரணத்தினால் புனித ஸவ்வால் மாதத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 30 ஆக பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திகதி மாலை துல்கஃதா மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழு ஏகமனதாக தீர்மானித்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தெளபீக் சுபைர் உள்ளிட்ட நம்பிக்கையாளர்கள், பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிநிதி ஏ.எஸ்.எம்.ஜாவித், வளிமண்டல திணைக்கள அதிகாரி காலாநிதி மொகமட் சாலிகீன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மெளலவி புஹாரி உள்ளிட்ட உறுப்பினர்கள். மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் ஹிஜ்ரி 1444 புனித துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு புனித துல்ஹஹ்தா பிறை 29வது நாளாகிய 2023 ஜூன் மாதம் 19ஆம் திகதி திங்கற்கிழமை கூடும் எனவும் பிறைக் குழுவால் தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :