"மீள்குடியேற்றத்திலுள்ள சமூக தனித்துவத்தை உணர்ந்தவர்" - சல்மான் எம்.பியின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!



ஊடகப்பிரிவு-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மானின் மறைவால் முஸ்லிம் சமூகம் நல்லதொரு புத்திஜீவியை இழந்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவரது அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவராக இருந்த மர்ஹும் சல்மான், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தில் கணிசமான பங்களிப்பை நல்கிய பெருந்தகை. குறிப்பாக, வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேறலில் ஒரு சமூகத்துக்குள்ள தனித்துவ அடையாளத்தைப் புரிந்து செயலாற்றியவரும் இவர்தான்.
சட்டப் புலமையில் அவரிடமிருந்த நுணுக்கம் பெருந்தலைவர் அஷ்ரஃபுக்கும் பல தடவைகள் உதவியிருந்தன. பாராளுமன்ற உறுப்பினராயிருந்த அவர், வாக்குறுதியைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் இன்னும் பிரகாசிக்கின்றன.
"நிச்சயமாக, நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும்" என்கிறது இறைமறை. எனவே, இறைவனின் நாட்டத்தில் நம்பிக்கை வைத்து அன்னாருக்காகப் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தினருக்கு பொறுமையையும் மனதைரியத்தையும் வழங்குவானாக..!ஆமீன்..!”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :