கல்முனை கல்வி வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி ஆரம்பம்



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி. நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

எதிர்வரும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியின் போது, கல்முனை வலயம் முதலாம் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தும் என இங்கு உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கல்முனை கோட்டத்தில் உள்ள கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் உள்ள 17 பாடசாலை மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதுடன் 125 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (12.05.2023) மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வின் போது விளையாட்டுப் போட்டி செயலாளரும் உடற்கல்வி ஆசிரியருமான எம்.ஆர்.ஏ.கியாஸ், மருதமுனை ~ம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் பிரதி அதிபர் எம். எம்.நியாஸ், அல்ஹம்றா வித்தியாலயத்தின் உதவி அதிபர் எஸ்.எம்.ஜூகைறுத்தீன் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :