கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் "வர்ண இரவு" நிகழ்வு வரலாற்றில் முதன்முறையாக நிந்தவூர் அல்- அஸ்ரக் தேசிய பாடசாலை காஸிமி மண்டபத்தில் கல்முனை கல்வி வலய உடற்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்தார். இந்நிகழ்வில் மேலும் கல்முனை கல்வி மாவட்ட பொறியலாளர் ஏ.எம். ஸாஹிர், கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். ஜாபீர், எம்.எச்.றியாஸா, பீ. ஜிஹானா ஆலிப், என். வரணியா, ஏ.எச்.பௌஸ், உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலிக், உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்மா மலிக், என். சஞ்சீவன், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம். சரிபுதீன் உட்பட வலயக்கல்வி அலுவலக அனைத்து பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் விளையாட்டுத்துறையில் சாதித்த கல்முனை வலய பாடசாலைகளின் 300க்கும் மேற்பட்ட வீரர்களை பாராட்டி கௌரவித்த "வர்ண இரவு" நிகழ்வில் சாதனைக்கு துணையாக நின்றவர்கள், அண்மையில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் உட்பட பலரும் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
0 comments :
Post a Comment