தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சேவையாற்றும் ஊழியர்களது பிள்ளைகளுக்கு , அதிகார சபையின் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையில் க.பொ.த.உயர்தரம், சாதாரண தரம் மற்றும் 5 ஆம் ஆண்டுப் புலமைப்பரிசில் சித்தியடைந்தவர்களுக்கு புலமைப்பரிசில்கள் உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு 03.05.2023 கொழும்பு தலைமைக்கரியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரஜிவ் சூரியராச்சி அவர்களின் தலைமையில் மாணவர்கள் தமது பாடசாலை மற்றும் பல்கழைகக்கழக கல்வியைத் தொடர்வதற்காக மாதாந்த உதவித் தொகைகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
இத் திட்டத்திற்காக அதிகார சபையின் தலைவர் இவ்வருடம் மேலும் 2.5 மில்லியன் ருபாவினை ஊழியர்களது புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உப தலைவர், பணிப்பாளர்கள், பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜானக்கவும் அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment