திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி நேற்று (25.06.2023) நடைபெற்றது.



ஹஸ்பர்-
டந்த மூன்று மாதங்களாக இத்தொடர் திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு Trinco Aid நிறுவனத்தின் நிதி உதவியில் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு வந்தது. எனவே இன்று இறுதி போட்டி நடைபெற்றது. இறுதி போட்டியில் Hindu CC vs Zodiac CC அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு விக்கட் வித்தியாசத்தில் Zodiac CC அணி வெற்றி வாகை சூடியது. இரண்டாம் இடத்தினை Hindu CC அணி பெற்றுக்கொண்டது. இப்போட்டி திருகோணமலை TDCA கிரிக்கெட் மைதானத்தில் 9.30 மணி அளவில் ஆரம்பமானது. நாணய சுற்சியில் வெற்றி பெற்ற Zodiac CC அணி களத்தடுப்பை தேந்தெடுத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய Hindu CC அணி 45.2 ஓவர்ல் அனைத்து விகெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக 48 ஓட்டங்களை தக்சனன் அவர்கள் பெற்றுக்கொடுத்தார். Zodiac CC சார்பில் பந்து வீசிய ஷானிக்க மலிந்த 10 ஓவர்கள் பந்து வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை பெற்றுக்கொடுத்தார்.

பதில் துடுப்பெடுத்தாடிய Zodiac CC அணி 37.3 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து விறுவிறுப்பான ஆட்ட முடிவில் வெற்றியை தனதாக்கி கொண்டது. அதிகபட்சமாக 47 ஓட்டங்களை ஹாஃப்ரான் அவர்கள் பெற்றுக்கொடுத்தார். Hindu CC சார்பில் பந்து வீசிய ஹாரிசன் 10 ஓவர்கள் பந்து வீசி 36 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷானிக்க மலிந்த பெற்றுக் கொண்டார்.

இத் தொடரின் ஆட்ட நாயகன் விருதை Hindu CC அணியின் வீரர் ஹரிசன் அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக தக்சனன் (Hindu CC) அவர்களும், தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக ஷானிக்க மலிந்த (Zodiac CC) அவர்களும், சிறந்த களத்தடுபாளர் ஆக பனுஷந்த் (Spence) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் துடுப்பாட்ட முடிவில் கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன் நிகழ்வில் திருகோணமலை நகர சபை செயலாளர் திரு. ராஜசேகர் அவர்களும், TDCA இன் தலைவர் திரு. வசந்தகுமார் அவர்களும், TDCA இன் முன்னால் தலைவர் திரு. பசீர் அமீர் அவர்களும், TDCA இன் முன்னால் தலைவர் திரு. சசிகுமார் அவர்களும், Trinco Aid சார்பில் நிறுவனர் திரு. இராஜக்கோன் ஹரிகரன் அவர்களும், முகாமையாளர் திரு. சங்கரலிங்கம் நவநீதன் அவர்களும் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

இத் தொடரின் அனைத்து ஆட்ட நாயகன் கிண்ணங்களையும், இறுதி போட்டியிற்கான அனைத்து கிண்ணங்களையும் Trinco Aid நிறுவனம் வழங்கி வைத்தது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :