இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 30 கிலோமீற்றர் நீந்திச் சென்ற ஜனாதிபதி சாரணர்க்கு இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் பாராட்டுகள்..



ட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற தேவேந்திரன் மதுஷிகன் அண்மையில் இந்தியாவின் தனுஷ் கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை பாக்கு நீரிணை வழியாக 30 கிலோமீற்றர் தூரத்தை 12 மணித்தியாலங்களில் நீந்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அவரது துணிச்சலையும் தைரியத்தையும் பாராட்டி எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்க அவரை ஊக்குவிக்கும் முகமாக TMVP கட்சி தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் செத்சிறிபாய கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சில் பாராட்டு விழா நடைபெற்றது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :