கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்) தேசமாண்ய ஆதம்வாவா மன்சூரின் 39 வருட கால அரச சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழாவும், மன்சூர் எனும் நிருவாக ஆளுமை என்ற நூல் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 4.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சம்மாந்துறை சாதனையாளர்கள் வாழ்த்தும் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாபெரும் விழா அதன் தலைவர் எம்.எல்.தாஸிம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்விழாவுக்கு விருந்தினர்களாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர், தென்கிழக்கு பல்ககலைக்கழக உபவேந்தர், மட்டக்களப்பு மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என 5 நூறுக்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment