ஏறாவூர் நகரசபை - மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நேற்று நகரசபை பிரதான அலுவலகத்தில் இடம் பெற்றது.
நகரசபை வரலாற்றில் முதற்தடவையாக நகரசபை நிருவாகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியைச் சேர்ந்த டாக்டர் விகுஷ், பொது சுகாதார பரிசோதகர் பி.எம்.எம். பைசஸ், சிரேஷ்ட்ட தாதிய உத்தியோகத்தர் ஜெயராஜா மற்றும் திருமதி எஸ். சஸ்னா உட்பட நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் 70 குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது .
0 comments :
Post a Comment