சிங்கப்பூரில் பொறியியலாளராக பணியாற்றும் காரைதீவைச் சேர்ந்த இளம் சமூக செயற்பாட்டாளர் சண்முகநாதன் அருள்நாதன் ( வயது 41) நேற்று (29) மாரடைப்பால் திடீர் மரணமானார்.
காரைதீவைச் சேர்ந்த அருள்நாதன் காரைதீவு கந்தசுவாமி ஆலய மகாகும்பாபிஷேகத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார்.
கும்பாபிஷேகத்தின் போதும் பக்தர்களுக்கு நீராகாரம் வழங்கியிருந்தார்.
நேற்று காலை திடீரென நெஞ்சுவலி வந்ததும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதும் மரணமானார்.
காரைதீவிலும், பின்தங்கிய பல கிராமங்களிலும் அவரது சேவை கடந்த காலத்தில் கூடுதலாக இருந்தது.
அண்மையில் அட்டப்பள்ளத்தில் "3 கிராமங்கள் ஒரு சிந்தனை" என்ற திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய அட்டப்பள்ளம், திராய்க்கேணி, நிந்தவூர் தமிழ்ப்பிரிவு ஆகிய மூன்று கிராமங்களையும் இணைத்து இலவச கல்வியகம் ஒன்றை
"போகர் கல்வியகம்" என்று பெயரில் ஆரம்பித்து வைத்தார்.
போகர் கல்வியகத்திற்கான அனுசரணையை காரைதீவைச் சேர்ந்த அவுஸ்திரேலியா அளவு நிலஅளவையாளர் சிவ புண்ணியம் லோகேஸ்வரன் மற்றும் சிங்கப்பூர் பொறியியலாளர் அ.அருள்நாதன் ஆகியோர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மட்டக்களப்பில் திருமணம் செய்து ஒரு குழந்தையின் தந்தையாவார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்ப உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment