மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் நகர் அஷ்ரப் வித்தியாலயத்தில் அபிவிருத்தி பணிகளது அங்குரார்ப்பண நிகழ்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் பிரதேசத்தில் கடந்த 27 வருடங்களாக எவ்வித பௌதீக வள அபிவிருத்தி செயற்பாடுகளும் இன்றி காணப்பட்ட மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் நகர் அஷ்ரப் வித்தியாலயத்தின் புதிய அதிபராக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக் கொண்ட ஜலால்தீன் அவர்கள் எடுத்துக் கொண்ட துரித முயற்சியின் பலனாக உள்ளூர் அமைப்புக்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சமூக ஆர்வலர்களது உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளது அங்குரார்ப்பண நிகழ்வான பாடசாலையின் பௌதீக அபிவிருத்தி பெரு விழா நிகழ்வு இன்று திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஜலால்தீன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது-

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரமீஸ், உட்பட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலைகளது அதிபர்கள் ,ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள் ,பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் -

2024ஆம் ஆண்டை நோக்கிய அபிவிருத்தி பணி எனும் தொனிப்பொருளில் ,
பௌஸ் டீச்சர் நினைவு மன்றத்தின் 500,000 ரூபாய் நிதியில் சிறுவர் அரங்கம் அமைக்கப்பட உள்ளதுடன், ESDO அமைப்பின் 60,000ரூபாய் நிதியில்
சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் ,ஸதக்கா பௌன்டேசன் இன் 250,000ரூபாய் நிதியில் சிறுவர் மைதானம் அமைக்கப்பட உள்ளதுடன்

ஏ.ஜி.அப்துல் றகுமான் பௌன்டேசன் இன் 1இலட்சம் ரூபாய் நிதியில் பாடசாலை உள்ளக பாதுகாப்பு வேலி அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன்

கனடாவை சேர்ந்த ஜானகி பாலகிருஷ்னன் இன் ஒருங்கிணைப்பில் மலேசியாவை சேர்ந்த Dr. நேசன் மற்றும் திருமதி ஜோதி ராதா ஆகியோரின் 200,000 ரூபாய் நிதியில் நீர் விநியோக செயற்பாடும்,

துபாயை சேர்ந்த பகுமிதா முஸ்த்தபா , ஜப்பான் சாதிக், ஆஷிக் (Lions Club), ஜிப்ரி ராசிக் (அமானா வங்கி) , முன்னாள் அமைச்சின் செயலாளர் மஜீத் , ஆகியோரது நிதிப்பங்களிப்பில் பாடசாலை வளாகத்தை சூழவும் பழ மரக் கன்றுகளை நடும் வேைலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்,

லண்டனை சேர்ந்த ஹாலித் , மற்றும் எம்.ஐ. ஹாரீஸ் மௌலவி ஆகியோரது 100,000 ரூபாய் நிதியில் பாடசாலை சூழழுக்கான மின் ஔியூட்டல் வேலைத்திட்டமும்,
அல்ஹாஜ் J.அஹமட் லெப்பை (JP) , மற்றும் கட்டாரை சேர்ந்த அஜ்வத் , பாரீஸ் ஆகியோரது நிதிப்பங்களிப்பில் 5வகுப்பறைகளும் புனரமைப்பு செய்யப்பட்டு வர்ணம் பூசி அழகுபடுத்தல் என்பன இன்று ஆரம்பித்தல் மற்றும் கையளிப்பு செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :